நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்த நிலையில் மத்திய மந்திரி கூறியதாவது, 2047 ஆம் ஆண்டுக்குள் 10 கிகாவாட் அளவிற்கு அணுசக்தி உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அணுசக்தி சட்டங்களில் அவசியமான திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. வருகிற 2033 ஆம் ஆண்டுக்குள் 5 சொந்தமாக உருவாக்கப்பட்ட சிறு அணு உலைகள் செயல்படத் தொடங்கும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்