விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா. இந்த சீரியல் டி ஆர் பி யில் தற்போது முதல் இடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை அடிப்படையாகக் கொண்ட நகர்த்தப்படும் இந்த சீரியலில் ரோகினி எப்போது மாட்டுவார் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இதுவே சிறகடிக்க ஆசை சீரியலின் கருவாக பார்க்கப்படுகின்றது. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கோமதி பிரியா நாயகியாக நடித்து வருகின்றார்.

மதுரையை சேர்ந்த இவருக்கு இந்த சீரியல் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளது. தற்போது பல குடும்பங்களில் கோமதி பிரியாவை அவர்கள் வீட்டு மீனாவாக கொண்டாடி வருகிறார்கள். சீரியலில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீனா தற்போது பட்டதாரிகள் அணியும் ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் சீரியலில் அடுத்த காட்சிகள் இதுவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.