பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சாலையில் 12-ம் வகுப்பு படிக்கும் லட்சுமி என்ற 18 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மூவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சிறுமியிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்ட லட்சுமி அவர்களிடமிருந்து போராடினார்.

அப்போது கல்நெஞ்சம் படைத்த அந்த கொடூரர்கள் சிறுமியை 350 மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். கடைசியாக அந்த கொடூரர்கள் செல்போனை பிடுங்கி கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது தூரம் சென்ற பிறகு வண்டியை அவர்கள் நிறுத்தினர். அதில் ஒருவன் மட்டும் இறங்கி வந்து என்னை மன்னித்துவிடு என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.