
மதுரை மாவட்டத்திலுள்ள பாசிங்காபுரம் பகுதியில் ஷர்மிளா (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளா கடந்த 9-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் பணி முடிந்து இரவில் அவர் வீட்டிற்கு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சர்மிளா வீட்டிற்குள் சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடைத்தது. அப்போது வீட்டில் இருந்த 250 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டதோடு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் காவல் ஆய்வாளர் வீட்டிலேயே கொள்ளை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..