
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்துலட்சுமி தனியாக இருந்த போது இரண்டு மர்ம நபர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என கேட்டனர். இதனால் தண்ணீர் எடுத்து வர முத்துலட்சுமி வீட்டிற்குள் சென்றார். அப்போது மர்ம நபர்கள் முத்துலட்சுமியிடம் அரிவாளை காட்டி மிரட்டி கை கால்களை கட்டி போட்டுள்ளனர். உடனே முத்துலட்சுமி கத்தி கூச்சல் விட்டார்.
இதனால் மர்ம நபர்கள் முத்துலட்சுமியின் வாயில் ஒரு துணியை வைத்து அமுக்கி அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து முத்துலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப் கலில் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.