
உத்தர் பிரதேஷ் மாநிலம் டேராடூன் பகுதியில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ஸ்கூட்டரில் வந்த நபர் அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டுவிட்டு வேகமாக சென்று விட்டார். இது அவ்விடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கட்சியின் பதிவாகியிருந்தது.
இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஸ்கூட்டரில் சென்ற கிசான் என்ற நபரை கைது செய்தனர். காவல்துறையினரின் இந்த துரித நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
https://x.com/sirajnoorani/status/1856181362354455010