புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் என்ற பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இடம் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமானது. இந்த குடோனில் நேற்று முன்தினம் இரு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் கார்த்திக் (27) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த நிலையில், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த குடோன் அரசு உரிமம் பெற்று செயல்பட்டு வந்த நிலையில் மின் கசிவின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.