தமிழகத்தில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் அனைத்து துறைகளிலும் புதுப்புது வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வேலைகளை முடித்து விடுகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்தின் இயக்குனர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தில் இருந்தும் பட்டா சிட்டா பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.