
சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி வாசகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி ஆறாம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த புத்தகக் காட்சியில் 120 அரங்குகளில் வரலாறு, இலக்கியம், சிறுகதைகள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் பட்டிமன்றம், கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.