கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ராபிடோ பைக் அல்லது ஆட்டோ மூலமாக தனது வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவர் வேலைக்கு செல்வதற்காக ராபிடோ பைக் டாக்ஸி ஒன்றை முன் பதிவு செய்தார்.

அதன் பிறகு சற்று நேரத்தில் வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண்ணை பிக்கப் செய்வதற்காக ராபிடோ பைக்கில் வந்தார். அந்த இளம் பெண் வாலிபருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக் நிறுத்திவிட்டு அந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் வாலிபரை எச்சரித்துள்ளார். ஆனால் மீண்டும் வாலிபர் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் அந்த பெண் பைக்கில் இருந்து இறங்கி வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது கன்னத்தில் பளார் என்று 2 அறை விட்டார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் இளம்பெண்ணை காப்பாற்றி வாலிபரை கைது செய்தனர். இதனை அடுத்து அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த வாலிபர் ஜெய்ப்பூரை சேர்ந்த மகேஷ் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.