இந்தோனேஷியாவின் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குடும்பங்களின் பொருளாதார தேவைகளை சமாளிக்க, இளம்பெண்கள் சுற்றுலா பயணிகளுடன் தற்காலிக திருமணம் செய்து கொள்வது பரவலாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த திருமணங்கள் வெறும் வாரங்களோ, மாதங்களோ மட்டும் நீடிக்கின்றன. சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் வரை மட்டுமே இளம்பெண்கள் அவர்களது மனைவிகளாக வாழ்ந்து, பின்னர் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதும் அந்த திருமணங்கள் முடிவடைகின்றன.

இந்த வகை திருமணங்கள் பெரும்பாலும் ஏழை, எளிய பின்னணியை கொண்ட பெண்களால் நடத்தப்படுவதால், அவர்களின் வாழ்க்கை மிகவும் சிக்கலாகி விடுகிறது. பெற்றோர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு திருமணம் செய்த இளம்பெண்கள் பல முறை திருமணமாகி, அதனை விவாகரத்து செய்து வருகின்றனர். இந்த பாத்திரத்தில் சிக்கிய பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.

சஹயா என்ற பெண் தனது வேதனையை பகிர்ந்துள்ளார். 15 பேரை திருமணம் செய்துவிட்டதாக கூறிய அவர், இவரது முதல் கணவர் சவுதி அரேபிய நாட்டவர் என்று தெரிவித்தார். இந்த திருமணங்கள் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து அவர் தனது குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார் என்றாலும், வாழ்க்கையின் இருண்ட தருணங்களை மறக்க முடியவில்லை என்று கூறினார்.

இதுபோல், நிஷா என்ற மற்றொரு பெண் 20 முறை தற்காலிக திருமணம் செய்துவிட்டதாக கூறி, தற்போது தனது புதிய வாழ்க்கையை குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.