காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரத்தில் வசித்து வரும் அருள் என்பவரிடம் சல்சா என்ற பெண் வீடு கட்டுவதற்காக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் ரூபாய் என் கணக்கில் மாதம் 30000 கொடுத்து வந்திருக்கிறார் அந்த பெண். இதே போல் சுமார் நான்கரை வருடங்களாக கடனை திருப்பி செலுத்தி வருகிறார்.

இருந்தபோதிலும் கடன் கொடுத்தவர் மிரட்டி பணம் கேட்டு வருவதாக அந்த பெண் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் கொடுக்காவிட்டால் குழந்தையை தூக்கி சென்று விடுவதாகவும் அந்த நபர் மிரட்டி உள்ளதாக கூறியிருக்கிறார் இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.