திருவள்ளூரை சேர்ந்த இளம்பெண் அஜித்குமார் என்ற வாலிபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அஜித் குமார் அந்த பெண்ணை காதலித்து ஏமாற்றியுள்ளார். அந்த பெண் இரண்டு லட்ச ரூபாய் வரை அஜித் குமாருக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் தனது காதலியை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.