
தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால் புதிய கண்டக்டர் மற்றும் ஓட்டுநர்கள் நியமிக்கப்படவில்லை என்றார். கடும் நிதிச் சுமையில் இருந்த போக்குவரத்து கழகம் திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் அரசு போக்குவரத்து கழகம் எப்போதும் தனியார் மையமாகாது. தமிழகத்தில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில் மற்ற போக்குவரத்து கழகத்திலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்