ராஜஸ்தான் மாநிலம் ஃபுலேராவில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த காணொளியில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை பிரம்பு ஒன்றால் கடுமையாக தாக்குகின்றனர்.

அவர் வேண்டாம் என்று கெஞ்சியும் தொடர்ந்து அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. இதனை சுற்றி இருந்த பலரும் காணொளியாக பதிவு செய்கின்றனரே தவிர யாரும் அவரை அடிக்க வேண்டாம் என்று தடுக்கவில்லை. இந்த காணொளியை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.