
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் நிருபர்கள் விமான நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது ரஜினிகாந்த் அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறி பதில் சொல்ல மறுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ரஜினிகாந்த் பேசியது பற்றி கூறினார். அதாவது youtube சேனலில் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி நடிகர் ரஜினிகாந்த் ஆதங்கம் என்று வைக்கப்பட்டு இருந்தது.
இந்த தலைப்பை பார்த்து நான் மிகவும் பயந்துவிட்டேன். ஒரு நிமிஷம் ஆடிப் போய்விட்டேன். அதன் பின் உள்ளே சென்று பார்த்தல் அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று இருந்தது. சூட்டிங் முடிந்து வருபவரிடம் இப்படி கேட்டால் அவர் என்ன பதில் சொல்லுவார். எனவே இது போன்ற கேள்விகளை ரஜினிகாந்திடம் கேட்காதீர்கள். மேலும் துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே பதவி குறித்து எல்லாம் ரோட்டில் வருவோர் போவரிடம் கேட்காதீர்கள் என்றார். மேலும் நான் இப்படி பேசியதற்கு ரஜினிக்கு பதிலடி கொடுத்து விட்டதாக கூறி அடுத்ததாக செய்தி போடுவார்கள் என்றும் நகைச்சுவையாக கூறினார்.