தமிழ் திரையுளவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்திற்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாக அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தார். தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்துக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அதில் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து கார் பந்தயம், துப்பாக்கி சூடுதல், பைக் சுற்று பயணம் என தனக்கு பிடித்து துறைகளிலும் தனி முத்திரை பதித்து மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெற்றிருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே அஜித்துக்கு ஆதரவாக அதிமுக, பாஜக, திமுக ஆகிய கட்சிகள் செயல்படுவதாக பேச்சு அடிபடும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும், அவரை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அஜித்துக்கு முதல் ஆளாக வாழ்த்து கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.