இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று பெங்களூருவில் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக பணிபுரிந்துள்ளார். அதோடு புதிய கல்விக் கொள்கையை தயார் செய்த குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் இன்று காலமான நிலையில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமன் நிலத்தில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது முதல்வர் ஸ்டானின் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பத்மவிபூஷன் விருது வென்ற கஸ்தூரி ரங்கன் மறைவு செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்தியா மிகப்பெரிய உயரங்களை அடைவதற்கு அவர் மிகவும் அளப்பெரிய பங்கு ஆற்றியவர். அதுமட்டுமின்றி பல முக்கிய பொறுப்புகளிலும் பகித்துள்ளார். மேலும் அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.