பிரபல விஞ்ஞானி மற்றும் இயற்பியலாளர் ராஜகோபால சிதம்பரம். இவர் இந்தியாவின் அணுசக்தி சோதனைகளில் முக்கிய நபராக திகழ்ந்தார். இவருக்கு 88 வயது ஆகும் நிலையில் இன்று காலமானதாக அணுசக்தி துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

இவருடைய மறைவுக்கு தற்போது பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய நபர்களில் ராஜகோபால் சிதம்பரமும் ஒருவர். இந்தியாவின் அறிவியல் திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை கொடுத்தவர். அவருடைய பங்களிப்பு அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கும். மேலும் அவருடைய மறைவு வருத்தத்தை தருவதாகவும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.