பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான மகன் பெற்றோரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜான்சியின் நவாபத் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் லட்சுமி பிரசாத்(60) என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி விமலா (55), மகன் அங்கீத் (28) ஆகியோர் உடன் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி அங்கீத் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகனை பெற்றோர் கண்டித்ததால் இருவரையும் கொடூரமாக தாக்கி அவர் கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பெற்றோரின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.