
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாம்சன் பேட்டையில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேப்பனபள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்த சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மாதேஸ்வரன் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாதேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மாதேஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.