சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை அருகேயுள்ள தீயணைப்புதுறை நிலையம் எதிரில் டீக்கடை ஒன்று உள்ளது. இன்று காலை டீக்கடை அமைந்துள்ள சாலையில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் மீதும், டீக்கடையில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் மோதியது.

இந்த விபத்தில் நந்தனத்தை சேர்ந்த பாபு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.காரை ஓட்டி வந்தவர் அபீஸ் அகமது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அகமது பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.