மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு காவலர் முத்துக்குமார் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறு முத்துக்குமாரை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே முத்துக்குமார் உயிருழந்தார்.

அவரது உறவினரான ராஜாராம் என்பவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ராஜாராமை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முத்துக்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.