
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் 13 வயது சிறுமி ஒருவர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி செவ்வாய்க்கிழமையன்று 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
ஆனால் காலையில் பள்ளிக்கு செல்வதற்காக வெளியே சென்று பள்ளிப் பேருந்து வராததால் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் இது தற்கொலை என்று உறுதி செய்துள்ளார்கள். மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.