
ஐசிசி டி 20 கிரிக்கெட் போட்டி ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில் 20 அணிகள் போட்டியில் கலந்து கொள்கிறது. இந்த போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெறும் நிலையில் உலகம் முழுவதும் பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டி நியூயார்க்கில் நடைபெறும் நிலையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக தற்போது போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வழக்கமாக வழங்கப்படும் பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு போட்டி நடைபெறும் மைதானம் தீவிர கண்காணிப்பில் இருக்கிறது. இது தொடர்பாக நியூயார்க் கவர்னர் ஹேத்தி கொச்சூல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உளவுத்துறை தகவலின் படி பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இருப்பினும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சோதனை மற்றும் உயர்ந்த பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் உலகக்கோப்பை போட்டி பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான போட்டியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.