
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் பலர் தங்கள் உறவுகளை இழந்து தீரா துயரில் தவிக்கும் நிலையில் மதத்தின் பெயரை கேட்டு ஆண்களை மட்டும் குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒவ்வொருவரின் சோகப் பின்னணியும் வெளியாகி மனதை உலுக்குகிறது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதி திருமணமான ஒரு ஜோடி ஹனிமூனுக்காக அங்கு சென்ற நிலையில் கணவனை இழந்து அந்த பெண் பரிதவிப்பில் இருப்பது தற்போது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Lt Vinay Narwal’s last video from Kashmir. Pak will pay for this.. pic.twitter.com/GYE9IX4bgZ
— Frontalforce 🇮🇳 (@FrontalForce) April 23, 2025
அந்தப் பெண் தன் கணவன் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த பெண் தன் கணவனின் இறுதி அஞ்சலியின் போது மிகவும் கண்ணீரோடு அழுத வீடியோவும் வைரலாகி வருகிறது. அவர்களின் திருமண புகைப்படங்களும் வைரலாகி பலரும் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிவரும் நிலையில் அந்த தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு முன்பாக எடுத்த ஒரு காதல் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது இந்திய கப்பற்படை அதிகாரியான வினய் நார்வாலுக்கு 26 வயது ஆகும் நிலையில் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.
இவர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோவில் ஷாருக்கான் போன்று வினய் தோற்றமளிக்கும் நிலையில் பின்னர் அவருடைய மனைவி மிகவும் உற்சாகமாக தன் கணவனை கட்டி அணைத்து நடனமாடுகிறார். மேலும் நூறு வருடம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கனவோடு இருந்த பெண்ணின் வாழ்க்கை ஒரே நொடியில் சிதைந்தது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.