ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளதோடு இனி பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானும் போருக்கு தயாராகி வருவது போல் தற்போது சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதோடு எல்லையில் வீரர்களை குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தற்போது பாகிஸ்தான் நாட்டு கொடியை எரித்துள்ளனர். அதாவது நெல்லையில் தான் கொடியை எரிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அம்பையில் உள்ள ஒரு பகுதியில் வஜ்ரசேனா அமைப்பினர் நேற்று நள்ளிரவு நேரத்தில் பாகிஸ்தான் நாட்டு கொடியை சிலர் எரித்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்த வீடியோவும் வைரலாகியுள்ளது. அதோடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவு எது.