
ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும், அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கர தாக்குதலால் வேதனை அடைந்துள்ளதாக அமைச்ச கூறியுள்ளார். கொடூரமான பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் தப்பி விட மாட்டார்கள் என அமித்ஷா கூறியுள்ளார்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தற்பொழுது உடனடியாக அமித்ஷா ஸ்ரீநகருக்கு சென்று முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.