டொமினிகன் குடியரசின் தலைநகரான சான்டோ டொமிங்காவில் ஒரு புகழ்பெற்ற இரவு நேர விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு மாகாண ஆளுநரும் முன்னாள் பேஸ் பால் வீரருமான ஆக்டோவியா டோட்டல் உட்பட மொத்தம் 66 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 160 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த நிலையில் கிட்டத்தட்ட 1000 பேர் வரை அந்த விடுதியில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டதால் ஏராளமான பிரபலங்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.