
நைஜீரியா நாட்டில் ஒரு லாரி பெட்ரோல் ஏற்றி சென்றது. அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் 70 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
முன்னதாக ஜெனரேட்டர் பம்ப் மூலம் வேறு ஒரு வாகனத்தில் பெட்ரோலை நிரப்பும் முயற்சி நடந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. நைஜீரியாவை பொறுத்தவரை எரிவாயு டேங்கர் அடிக்கடி விபத்தில் சிக்கி மக்கள் பலியாவது தொடர்கதை ஆகிறது.