தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பக்ரீத் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ‌ சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜூன் 17ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, மதுரை, கும்பகோணம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு 545 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேபோன்று நாளை (சனிக்கிழமை) 585 சிறப்பு பேருந்துகளும், திங்கட்கிழமை 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். இதேபோன்று ஜூன் 17ஆம் தேதி பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வர மொத்தம் 705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் இந்த பேருந்தில் முன்பதிவு செய்பவர்கள் www.tnstc.in And Mobile App மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.