மத்திய ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரியாக இருப்பவர் வி. சோமண்ணா. இவர் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வந்தே பாரத் ரயில் சேவையில் ஏழை எளிய மக்களும் பயணம் செய்யும் விதமாக டிக்கெட் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

நாட்டில் ரயில்வே துறையின் செயல்பாடு ராணுவம் போன்றது. நாட்டில் ராணுவம் முதலிடத்திலும்  ரயில்வே இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு இரண்டு துறைகளில் செயல்பாடுகளும் இருக்கும் என்று கூறினார். மேலும் நாட்டின் முக்கிய பகுதிகளில் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வரும் நிலையில் பலரும் அதில் பயணம் செய்கிறார்கள். இருப்பினும் அதில் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழும்  நிலையில் தற்போது கட்டணம் குறைக்கப்படும் என்று  ரயில்வே அமைச்சர் கூறியது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.