தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 28ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 தினங்களுக்கு வழக்கம் போல இயங்கும் பேருந்துகளுடன் சேர்ந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பிற ஊர்களில் இருந்தும் இயக்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வரும் நிலையில் ஏராளமான மக்கள் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இந்த நேரங்களில் ஆம்னி  பேருந்துகள் கட்டணங்களை உயர்த்தி பயணிகளிடம் வசூல் செய்யும். இது போன்ற பிரச்சனைகள் ஒவ்வொரு முறையும் எழத்தான் செய்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆம்னி பேருந்துகள் தீபாவளியை முன்னிட்டு அதிக கட்டணம் வசூல் செய்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1800 425 6151, 9445014436, 044-2474 9002, 2628 0445, 2628 1611 என்ற தொலைபேசி நபர்களில் தொடர்பு கொண்டு புகார் கூறலாம். மேலும் பயணிகளின் வசதிகக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.