மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் மக்கள் கவனத்துக்கு சில தவறுகளை செய்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ரயிலில் உள்ள பேண்ட்ரி காரில் யாராவது பயணித்தால் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். மேலும், ரயிலில் புகைபிடிப்பது, மது அருந்துவது அல்லது போதைப்பொருளை உட்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. ரயில்வே பயணிகள் நிர்ணயித்த வரம்பை விட அதிகமான லக்கேஜ் எடுத்துச் சென்றால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.