
பொதுவாக நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், சுகமானதாகவும் இருக்கிறது என்பதற்காக தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் ரயில்வே பயணிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விதிகளை உருவாக்கியுள்ளது.
அதில் ஒன்றாக, ரயிலில் சத்தமிட்டு பேசவோ, அதிக ஒலியுடன் பாட்டு கேட்கவோ, செல்போனில் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாகப் பேசவோ கூடாதென ரயில்வே விதி உள்ளது. யாரேனும் இந்த விதியை மீறினால், டிக்கெட் பரிசோதகரிடம் அதுகுறித்து புகார் அளிக்கலாம் என்று ரயில்வே விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.