சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவைகளை நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 23 நாட்களுக்கு  55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்காலிகமாக 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.