மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கர் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கருத்தரங்கு நடைபெறும் நான்காவது மாடியில் உள்ள அறையில் பெண் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அதே மருத்துவமனையில் உள்ள மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிலும் மாணவர் என்பது தெரிய வந்தது. அவருடைய உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளன.

இதனை தொடர்ந்து அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் தற்கொலை செய்யவில்லை என்றும் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டு தான் உயிரிழந்தார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து போராட்டம் வெடித்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் என்பவர் கொலைக்கு முன்பாக மது அருந்திவிட்டு ஆபாச வீடியோக்களை பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது கொடுமை தாங்க முடியாமல் மூன்று மனைவிகள் அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.