
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கு விரைவில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த திட்டம் விரைவில் அனைத்து காவல் நிலையங்களிலும் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது காவல் நிலையங்களில் போலீசார் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாகத்தான் தற்போது தமிழக அரசு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமலுக்கு கொண்டு வர இருக்கிறது. இதனால் இனி காவலர்கள் காலை 7 மணிக்கே பணிக்கு வரவேண்டும். அவர்கள் காலை 7 மணிக்கு வந்து விரல் ரேகை மூலமாக அட்டனன்ஸ் வைக்க வேண்டும். மேலும் பணிக்கு தாமதமாக வருபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.