உட்கட்சி தலைவர்களை விமர்சிக்கும் பாஜக ஐடி விங் மற்றும் அண்ணாமலை வார் ரூம் குழுக்களுக்கு தமிழிசை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை பற்றி அவதூறு பரப்பும் பாஜக இணையதளவாசிகள் மீது, முன்னாள் தலைவர் என்ற முறையில் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பாஜகவுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றாலும், அவர்களால் வெளிநடப்பை தவிர வேறு எதையும் செய்ய முடியாது. பரட்டை என்று தன்னை சமூக ஊடகங்களில் சிலர் விமர்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், பரட்டையாக இருந்தாலும் இது ஒரிஜினல் (தலையை காட்டி) என்றார். அரசியல் கருத்துக்களை முன்வைக்காமல், தனிப்பட்ட தாக்குதலை செய்தால் அதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.