தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இந்த படத்திற்குப் பிறகு உதயநிதியுடன் சேர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது நிவேதா பெத்துராஜின் காரை காவல்துறையினர் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் கடும் வாக்குவாதம் செய்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது  அந்த  வீடியோ போலியானது என்பது தெரிய வந்துள்ளது. அதாவது அந்த வீடியோ பருவு என்ற வெப் தொடருக்காக எடுக்கப்பட்டது ஆகும். இந்த வீடியோ பட ப்ரொமோஷனுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜா ராணி படத்திற்காக நயன்தாரா மற்றும் ஆர்யா உண்மையாக திருமணம் செய்து கொண்டது போன்று அட்லி ப்ரோமோஷன் செய்தது போன்று சமீபத்தில் நடிகர் ஜெய்யும் தன்னுடைய படத்திற்காக அப்படி ஒரு ப்ரமோஷன் செய்தார். மேலும் தற்போது படத்திற்காக நிவேதா பெத்துராஜ் வீடியோ வெளியிட்ட நிலையில் அத்தனையும் நடிப்பா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.