உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் பகுதியில் போலீஸ் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இங்கு நடுரோட்டில் ஒருவர் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். அந்த நபர் மது போதையில் சாலையின் நடுவே அமர்ந்து மழையை ரசித்தபடி உட்கார்ந்திருந்தார்.   இருப்பினும் அவர் அந்த பரபரப்பான சாலையில் கொஞ்சம் கூட பயப்படாமல் நடுரோட்டில் சேர் போட்டு உட்கார்ந்துள்ளார். அவரை இரு புறமும் வாகனங்கள் கடந்து செல்கிறது. அந்த சமயத்தில் அவ்வழியாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில்  நாற்காலி உடைந்தது. இருப்பினும் அந்த நபர் மீண்டும் எழுந்து தான் எப்படி உட்கார்ந்து இருந்தாரோ அதேபோன்று பழையபடி உட்கார்ந்தார். அவர் கொஞ்சம் கூட பயமின்றி லாரி மோதிய பிறகும் அதே நிலையில் இருந்த வீடியோ மற்றும் லாரி மோதியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த சமயத்தில் போலீஸ் சோதனை சாவடி அருகே ஒருவர் இருந்ததாகவும் அவர் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காததாகவும் கூறப்படுகிறது.