ராஜஸ்தான் மாநிலத்தின் பயாவர் பகுதியில் அமில தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிவு ஏற்பட்டு பெரும் விபத்து நடந்துள்ளது. திங்கள்கிழமை இரவு 10 மணியளவில், சுனில் டிரேடிங் நிறுவனத்தின் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாங்கரில் இருந்து நைட்ரஜன் வாயு திடீரென வெளியேறத் தொடங்கியது.

வாயு கசிவு விரைவாக அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பரவியது. மக்கள் மூச்சுத் திணறல், கண்களில் எரிச்சல் மற்றும் மயக்கம் போன்ற கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டனர். பலர் வீடுகளிலேயே மயங்கினர். இந்த விபத்தில் ஆளை உரிமையாளர் சுனில் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

55-க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்லப்பிராணிகள் மற்றும் சாலையில் இருந்த விலங்குகள் உயிரிழந்தன. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடியாக களத்திற்கு விரைந்து இரவு 11 மணிக்கு வாயு கசியலை கட்டுப்படுத்தினர்.