ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்தும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று லிமோசின். இந்த கார் திடீரென FSB தலைமை அலுவலகத்திற்கு அருகே தீப்பிடித்து எரிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய் இருக்கும் நிலையில் அந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென இயந்திரப் பகுதியில் தீப்பிடித்து முழு காரும் எரிய தொடங்கியது.

இந்த விபத்து நடந்த இடத்தில் ஒரு ரெஸ்டாரன்ட் இருந்த நிலையில் உடனடியாக அங்கிருந்த மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இது ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

தற்போது புதினுக்கு 72 வயது ஆகும் நிலையில் இந்த லிமோசனின் வகை கார்களை வடகொரிய அதிபர் உள்ளிட்டோருக்கு பரிசாகவும் வழங்கியுள்ளார். இந்த வகை கார்களை அடிக்கடி புதின் பயன்படுத்தும் நிலையில் தற்போது தன்னுடைய பாதுகாப்பை அதிகரிக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் முக்கிய இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவர் பாதுகாப்பு உடை அணிந்து செல்கிறார். இந்த கார் தீப்பிடித்து எரிந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.