சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய சூரமங்கலத்தில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனம் பள்ளியை விலைக்கு வாங்கி விட்டதாகவும், தொடர்ந்து அங்கு பள்ளியை இயக்க முடியாது எனவும் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. பள்ளியை இடித்து விட்டு குடியிருப்பு கட்ட உள்ளதாக தகவல் பரவியது.

இதனால் மாணவர்களின் பெற்றோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த எம்எல்ஏ அருள் பெற்றோர் சார்பில் பள்ளி தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் திடீரென எம்எல்ஏ பெண் தாளாளரின் காலில் விழுந்து கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஒருமுறை அவர் பள்ளி மாணவர்களின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.