
கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கும்பகோணம் திரும்பியபோது விபத்து நடந்தது. சாலை நடுவில் இருக்கும் பூ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 20 பேர் காயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.