
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடையாஞ்சி பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நரசிம்மன்(17) பத்தாம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் வேலை பார்த்து வந்தார். நேற்று நரசிம்மன் நெகுந்தி பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக சடலமாக கடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் சிறுவனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.