கஞ்சா வழக்கில் கைதான இரண்டு மலையாள திரைப்பட இயக்குனர்கள் கேரளா திரைப்பட ஊழியர்கள் சம்மேளனத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் இயக்குனர்கள் கலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா ஆகியோர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் மீதும் கேரள திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொச்சியில் 1.6 கிராம் உயர் ரக கஞ்சாவுடன் இயக்குனர்கள் ரகுமான், அஷ்ரப் ஹம்சா இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 2 மணிக்கு கஞ்சா பிடிபட்ட வீடு ஒளிப்பதிவாளர் சமீர் தாகீருக்கு சொந்தமானது என்பதால் அவரிடம் விசாரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது