முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தார். சமீபத்தில் மும்பையின் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், நிதி நெருக்கடியில் சிக்கிய நிலையில் இருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பராவதாலும், சச்சின் உதவியளிக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில், மும்பை வாங்கடே ஸ்டேடியத்தின் 50ஆவது ஆண்டு விழாவில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாக இருந்ததை பார்த்த சுனில் கவாஸ்கர், உடனடியாக அவரது நலனை கருத்தில் கொண்டு உதவ முன் வந்தார்.

கவாஸ்கர் தனது சேம்ஸ் பவுண்டேஷன் மூலம் மாதம் ரூ.30 ஆயிரமும், ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ செலவிற்காக ரூ.30 ஆயிரமும் வழங்க முடிவு செய்துள்ளார். இதற்காக வினோத் காம்ப்ளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை நேரில் சந்தித்து உடல் நலத்தின் விவரங்களை தெரிந்துகொண்டதையடுத்து, நிதியுதவி வழங்க உத்தரவிட்டதாக சுனில் கவாஸ்கரின் நண்பர் அனில் ஜோஷி தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 104 முறை இந்திய அணிக்காக விளையாடிய காம்ப்ளிக்கு, தற்போது பிசிசிஐவிலிருந்தும் ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும், தனிப்பட்ட காரணங்களால் அவர் மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகிறார். தற்போது சுனில் கவாஸ்கரின் உதவி அவருக்கு அவருக்கு மிகவும் உதவும் என்று கருதப்படுகிறது.