
தமிழ்நாடு சிறந்த நிலை பல்கலைக்கழகம் இறுதிப்பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மே 7ஆம் தேதி இந்த இறுதி பருவ தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு தேர்வுகள் காரணமாக தற்போது இந்த பருவ தேர்வு நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் வருகின்ற மே 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அதே தேர்வு மையத்தில் இந்த பருவ தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மணிவண்ணன் அறிவித்துள்ளார். கடந்த ஏழாம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பருவ தேர்வு இந்த மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.