இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் சமூக வலைதளம் மூலம் காதலித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏகே என்பவர் ஒரு பெண்ணை சமூக வலைதளம் மூலம் காதலித்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் அடினா. இந்தப் பெண்ணை ஏகே காதலித்து வந்த நிலையில் அவரை நேரில் சந்திக்க செல்லும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் அணியும் பர்தாவை போட்டுள்ளார். அந்தப் பெண் மதத்திற்காக பர்தா அணிந்துள்ளதாக கருதி ஏகே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் அடினா தனக்கு பெற்றோர் இல்லை என்று கூறியதோடு உறவினர்களும் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஏகே தன்னுடைய வீட்டில் வைத்தே கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அடினாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அடினா பர்தாவை எடுக்காமல் இருந்ததோடு‌ ஏகே பக்கத்தில் வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவரை விட்டு விலகி சென்றுள்ளார். அதோடு அவரின் குடும்பத்துடனும் அடினா அதிக அளவில் பேசாமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த ஏகே அடினாவை பற்றி விசாரிக்க பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது அவர் உண்மையிலேயே ஒரு பெண்ணே கிடையாது. அவருடைய பெயர் இஷ். அவர் ஆணாக இருக்கும் பட்சத்தில் பெண் போன்று  வேடமணிந்து  ஏகேவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் ஏகே புகார் கொடுத்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இஷ் பெண் வேடமணிந்து ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. மேலும் இஷ் ஏகேவின் சொத்துக்களை பறிப்பதற்காக பெண் போன்று வேடம் அணிந்து அவரை திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்